விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா கார்கி - அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?
இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினரின் போராட்டம் ஆரம்பமானது.
சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.
வன்முறைக்கு பொறுப்பேற்று, கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவி விலகினார்.
அடுத்த நாளே, இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகினார்.

சுசீலா கார்கி
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக மக்கள் மற்றும் ஜென் Z தலைமுறையினருக்கு இருந்த ஒரே சாய்ஸ், நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி.
இந்தப் பதவியை முதலில் மறுத்தாலும், நேற்று இரவு இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர்... ஊழல் வழக்குகளில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நேர்மையாக தீர்ப்பு வழங்கியவர் - இதுதான் இவரை மக்கள் தேர்ந்தெடுத்தற்கான முக்கிய காரணம்.
தேர்தல் எப்போது?
நேபாளத்தின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.