செய்திகள் :

``விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR

post image

விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க-வின் முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்களுக்கு மேலானோர் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி முகவர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைக்கும்போது, அரசின் திட்டங்கள், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்.

ஓரணியில் தமிழ்நாடு - ஸ்டாலின்

மத்திய அரசு நமது மொழி, இனத்தை அழிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து மக்களை ஒன்றிணைக்கும் எண்ணத்தோடு `ஓரணியில் தமிழ்நாடு' என்று மக்களை முதல்வர் இணைத்து வருகிறார்.

நாளை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களோடு இணைந்து நடத்த உள்ளோம்.

மண், மொழி, இனம் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறி மக்களோடு இணைந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஓரணியில், தமிழ்நாடு திட்டத்தில் 4.19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்னும் பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நாங்கள் செல்லும் இடங்களில் அரசை விமர்சனம் செய்யவில்லை, திட்டங்களை விமர்சனம் செய்யவில்லை; மக்கள் முதல்வரோடு இருக்கிறார்கள். முதல்வர் மக்களோடு இருக்கிறார். நாங்கள் மக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மேலும், 20 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொதுக் கூட்டமும், கரூரில் 30 ஆம் தேதி முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளது.

கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்கள் வருகின்றன. இதை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

முதல்வரைப் பொறுத்தவரை, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். தற்போது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரத்திற்கு மக்கள் கூட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே தொகையை வழங்கிவிட்டதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சனத்திற்கு பதிலளித்தார். எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியைப் பாராட்டிவிட்டால், அவர்களுக்கு வேலையே இருக்காது எனவும் தெரிவித்தார்.

TVK Vijay

தி.மு.க அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்லிவிட்டால், அவர்களுக்கு வேலையே இருக்காது. ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் யோசித்து, யோசித்து மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

தி.மு.க அரசை விட எந்த அரசும் சிறப்பாக நடத்த முடியாது. சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

விஜய் பிரசாரத்திற்கு மக்கள் கூடும் கூட்டம் குறித்த கேள்விக்கு, விஜய், "இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார். அடுத்த சுற்றில் பார்ப்போம்" என்று பதிலளித்தார்.

மேலும், காவல்துறையும் அரசாங்கமும் யாருடைய பிரச்சாரத்திலும் தடங்கல் ஏற்படுத்துவதில்லை. யாருடைய பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்தி முதல்வர் அரசியல் செய்வதில்லை.

Charlie Kirk கொலை: அரை கம்பத்தில் அமெரிக்க கொடி; எதிர்கட்சியினர் சொல்வது என்ன?

அமெரிக்காவின் உதா பல்கலைக்கழகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். Charlie Kirk மற்றும் Turning Point USAசார்லி கிர்க் ஒரு வலதுசாரி பழமைவாத செயற்பாட்டாளர் ஆவார். ... மேலும் பார்க்க

பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ் சொல்வதென்ன?

பா.ம.க-வில் கடந்த சில மாதங்களாகவே தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்புமே தாங்கள்தான் கட்சித் தலைவர் எனச் சொல்லி வருகின்றன. இதனால் அங்கு பல்வேறு குழப்பங்க... மேலும் பார்க்க

VP Election: `15 ஓட்டு; கணித ரீதியான வெற்றி; எதிர்க்கட்சிகள் கூட்டணி பலப்பட்டிருக்கிறது' – காங்கிரஸ்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இதனால், மாநி... மேலும் பார்க்க

Exclusive: ``வைகோ 100 முறை தாயகத்தில் சத்தியம் செய்தார்; காப்பாற்றவில்லை'' - மல்லை சத்யா சொல்வதென்ன?

ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் சில காலமாகவே கருத்து மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், மல்லை சத்யா கட்சியிலிரு... மேலும் பார்க்க

``எச்சரிக்கை, கவனமாக கேளுங்கள்; காசாவில் இருந்து உடனே கிளம்புங்கள்'' - தாக்குதலை அதிகரித்த நெதன்யாகு

நேற்று இஸ்ரேல் ஜெரூசேலத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.கூட்டமான பேருந்தில் ஏறிய இரண்டு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் தூப்பாக்கி சூடு நடத்தியதாக தகவவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 6 ப... மேலும் பார்க்க

ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன?

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.இ... மேலும் பார்க்க