``தடைகளும், வரிகளும் பிரச்னையை தீர்க்காது, மேலும் மோசமாக்கும்'' - ட்ரம்புக்கு சீ...
14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக: ஜெ.பி. நட்டா
உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக இருப்பதாக ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. இந்தியாவில் 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பாஜக அரசும் உள்ளன. பாஜகதான், நாட்டின் மிகப்பெரிய பிரதிநிதித்துவக் கட்சி.
மக்களவையில் 240 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜகவில் சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள், 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் கடந்த 11 ஆண்டுகளில் செயல்திறன் மற்றும் பொறுப்புள்ள அரசு அமைந்துள்ளது.
ஆனால், முந்தைய அரசு வளர்ச்சிப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அவர்களின் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மறந்துவிட்டனர். குடும்ப அடிப்படையிலான அரசியல், ஊழல், சமாதானம் ஆகியவைதான் இருந்தன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெ.பி. நட்டா, ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ. 15,000 கோடியை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க:பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணைநிற்கும் காங்கிரஸ்..! மோடி குற்றச்சாட்டு!