செய்திகள் :

தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்

post image

பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது அவர்கள் வகுப்புத் தோழர்கள் விளையாட்டாக கண்களில் பசையைத் தடவி வைத்துள்ளனர்.

அந்த மாணவர்கள் காலையில் எழும்போது அவர்களின் கண்கள் அதிகப்படியான கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

glue

மிகுந்த கண் எரிச்சலுடன் அலறி அடித்துக்கொண்டு விடுதி அதிகாரியிடம் இது குறித்து தெரிவித்தனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தற்போது தீவிர சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஒட்டும் பொருளால் கண்களுக்கு இப்படி பாதிப்பை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தால் தான் குழந்தைகளுக்கு பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட எட்டு பேரில் ஒரு மாணவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் 7 மாணவர்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெத்தாம்பாளையம... மேலும் பார்க்க

சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

மதுரை: போன் செய்து வரச் சொன்ன கணவர் கொலை; பார்க்கச் சென்ற இடத்தில் அதிர்ந்த மனைவி!

மதுரை பார்க் டவுன் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், முனிச்சாலைப் பகுதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் சந்தீப் என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார் நேற்று இரவு தன... மேலும் பார்க்க

``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல்

பாலிவுட் நடிகை திஷா பதானிபாலிவுட் நடிகை திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப... மேலும் பார்க்க

சருமத்தில் ஒவ்வாமை; உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்; ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடர் காரணமா?

நீலகிரி மாவட்டம் குன்னூர், அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அ.தி.மு.க -வைச் சேர்ந்த இவர் தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி... மேலும் பார்க்க

சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூ... மேலும் பார்க்க