தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நட...
ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது - நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெத்தாம்பாளையம் வள்ளி நகரைச் சேர்ந்த முத்துசாமி (50) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரிடம் இருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முத்துசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், எலையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரது தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

இதையடுத்து, சுரேஷ்குமார் தோட்டத்தில் சோதனை செய்தபோது கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்கள், பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, சுரேஷ்குமாரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.
சுரேஷ்குமார் பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3-ஆவது வார்டு திமுக கவுன்சிலராகவும், பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.