செய்திகள் :

Vikatan Digital Awards: ``அஜித் சார்கிட்ட சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு'' - Digital ICON மதன் கௌரி

post image

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.

மதன் கௌரி
மதன் கௌரி

இதில், உலகம் மற்றும் உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தையும் நேர்த்தியாக இத்தனை ஆண்டுகள் யூட்யூப் தளத்தில் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் மதன் கெளரிக்கு Digital ICON விருது வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பலராலும் கொண்டாடப்பட்டு, மிகுந்த வரவேற்பைப் பெற்ற `OMG Show’-வில் பிரபலங்கள் கலந்துகொண்டால், என்ன கேள்வி கேட்பார் என்று மதன் கௌரியிடம் கேட்கப்பட்டது.

பிரபலங்களும், மதன் கௌரியின் கேள்விகளும்!

டிரம்ப்?

``இந்தியா மீதான வரியை எப்போ கட் பண்ணுவீங்க?’’

விஜய் மல்லையா?

``உங்க பார்வையில உங்களைப் பத்தி என்ன சொல்லுவீங்க... நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?’’

நித்யானந்தா?

``கைலாசாவுக்கு பாஸ்போர்ட் எப்போ கிடைக்கும்?’’

மதன் கௌரி
மதன் கௌரி

அஜித்?

``அவரிடம் நான் சொல்லவேண்டியது ஒண்ணு இருக்கு. ஐடி கம்பெனில வேலை பார்க்கும்போது அவர் வீட்டு காம்பவுண்ட்டுல நின்னு, அவர் எப்பிடி வளர்ந்து இந்த நிலையில இருக்காரோ, அதேபோல நானும் ஆகணும்னு நினைச்சேன்... இதைச் சொல்லுவேன்.’’

விஜய்?

``2026-ல தயாராகி ஒரு கேள்வி கேட்டுக்கலாம். 2026-ல இந்த Show வரும்னு நம்புறேன்.’’

மதன் கௌரி?

``அடுத்து என்ன... நிறைய பிளான்ஸ் இருக்கு. அதையெல்லாம் செய்யணும்னு ஆசை.’’

Vikatan Digital Awards: ``100 வருட விகடனைப் போல பிளாக்ஷீப்பை உருவாக்கணும்'' - RJ விக்னேஷ்காந்த்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.`Best Solo Creator - Male', `Bes... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: "26 வருஷம் போராடி நீதி வென்ற கிருஷ்ணம்மாளுக்கு சமர்ப்பிக்கிறேன்!" - புஹாரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025 - ’’நம்ம ஊரு டீம் ஜெயிக்கணும்னு தான் நானும் ஆசைப்படுவேன்!’ - சாய் கிஷோர்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: டிஜிட்டல் திறைமையாளர்களுக்கான அங்கீகாரம்; இன்று மாலை 4 மணிக்கு தொடக்கம்

சினிமா விருதுகள், அவள் விருதுகள், நம்பிக்கை விருதுகள் என ஆளுமைகளை வருடந்தோறும் விருது வழங்கி கௌரவப்படுத்திவரும் விகடன், அடுத்தகட்டமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்... மேலும் பார்க்க

அறுவை சிகிச்சை நடுவே நர்ஸுடன் பாலியல் செயலில் ஈடுபட்ட மருத்துவர் - இங்கிலாந்தில் அதிர்ச்சி!

பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நோயாளியை விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவம... மேலும் பார்க்க