மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று(செப். 14) காலை 119.88 அடியிலிருந்து 119.72 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 18,357 கன அடியிலிருந்து, 15,724 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக, விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.02 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம்!