பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிர...
``என் மகன்களுடன் நேரம் செலவிட முடியவில்லை, இந்த இசைதான்..” பொன்விழாவில் இளையராஜா பேசியது என்ன?
இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்பொனி இசையைப் பாராட்டும் விதமாகவும் இந்த விழா நடந்தது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: "உலகில் இதுவரை தோன்றிய இசை மேதைகளுக்கு இதுபோன்ற பாராட்டு வழங்கப்படவில்லை.
இது முதல் முறையே நடக்கிறது. முதன்முறையாக முதல்வர் ஸ்டாலினிடம் நான் சிம்பொனிக்கு செல்லப்போகிறேன் என்று சொன்னதும், அவர் உடனே என்னை வாழ்த்தினார். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தார்கள். இந்த பட்டத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு வழங்கினார்.
84 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து 35 நாட்களுக்குள் இந்த சிம்பொனி இசையை உருவாக்கியது சவாலாக இருந்தது.
இதுவரை யாரும் செய்யாத, மற்ற இசைகளைப் பின்பற்றாமல், முற்றிலும் தனித்துவமான இசையை மட்டுமே உருவாக்கினோம்.
என் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா அவர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
குடும்பத்துடன் செலவிடாத அந்த நேரம் அனைத்தும் இந்த சிம்பொனி இசையில் பிரதிபலித்ததாகவும், இதனால் அவரது மகன்கள் பெருமைப்படுவார்கள்" என்றார்.
அதே சமயம், தமிழ்நாடு அரசின் உதவியுடன் விரைவில் இந்த சிம்பொனி இசையை வெளியிடுவோம் என்றும், பதிவு செய்யப்பட்ட பதிப்பைக் காட்டுவதற்குப் பதிலாக, அனைவரும் நேரடியாக இந்த இசையின் நேரடி அனுபவத்தை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!