செய்திகள் :

பிக் பாஸ் - 9 ஒளிபரப்பு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

post image

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.

வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற வேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

அந்த வகையில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்ன திரை நடிகர் புவியரசு, நடிகர் உமர், நடிகை பாடினி குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த முறையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதால், புதிய சீசனில் அவரைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!

The broadcast date of Bigg Boss - 9 has been officially announced.

கைவிடப்படும் லோகேஷ் - ஆமிர் கான் திரைப்படம்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஆமிர் கான் திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்த... மேலும் பார்க்க

மலைவாசிகள் குற்றவாளிகளா? தண்டகாரண்யம் டிரைலர்!

பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவான தண்டகாரண்யம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்கள... மேலும் பார்க்க

மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!

இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வைரலாகியுள்ளது.இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.13) பா... மேலும் பார்க்க

உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியா்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனா்.ஆடவருக்கான 35 கிலோ மீட்டா் நடைப் பந்தயத்தில் சந்தீப்குமாா் 2 மணி ந... மேலும் பார்க்க

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஈஷா சிங்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், இதுவே ... மேலும் பார்க்க

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முதல்முறையாக குவாலிஃபயா்ஸுக்கு தகுதி!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி, அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போ... மேலும் பார்க்க