TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய...
கைவிடப்படும் லோகேஷ் - ஆமிர் கான் திரைப்படம்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஆமிர் கான் திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார். ஆனால், நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து இயக்கிய கூலி கடுமையான எதிர்வினைகளைப் பெற்றதால் லோகேஷ் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதற்குள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இதனால், கைதி - 2 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கைதி - 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் ஆமிர் கானை வைத்து சூப்பர்ஹீரோ கதையை லோகேஷ் இயக்க இருந்தார். தற்போது, இப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க: மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!