செய்திகள் :

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாரா நவாஸ் கனி எம்பி? - சிபிஐ விசாரிக்க வழக்கு

post image

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.

நவாஸ்கனி எம்.பி

கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் மனைவி, மகனுக்கு ரூ 19.71 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் ரூ 40.62 கோடி சொத்து மதிப்பு காட்டப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ 23.58 கோடி சொத்து குவித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் சிபிஐ எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.

எனவே புகார் மீது விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸ்வா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?

தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.என்ன போராட்டம்? நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். இந்... மேலும் பார்க்க

``நூறு, பீரு, சோறு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஏன் செல்கிறீர்கள்?'' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழகம் முழுவதும், "உள்ளம் தேடி, இல்லம் நாடி" என்ற பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரத்தை மேற்கொண்டார்.... மேலும் பார்க்க

``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு

ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி ... மேலும் பார்க்க

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரம்திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல்பிரசாரபயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தத... மேலும் பார்க்க