செய்திகள் :

அறுவை சிகிச்சை நடுவே நர்ஸுடன் பாலியல் செயலில் ஈடுபட்ட மருத்துவர் - இங்கிலாந்தில் அதிர்ச்சி!

post image

பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நோயாளியை விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மயக்கமருந்து நிபுணராகப் பணியாற்றுபவர் டாக்டர் சுஹைல் அஞ்சும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதத்தில் இந்த விஷயம் நடந்துள்ளது.

அதாவது, சம்பவம் நடந்த அன்று காலை ஐந்து அறுவைச் சிகிச்சைகளுக்கு இவரே மயக்கமருந்து கொடுக்கும் நிபுணராக இருந்துள்ளார்.

மூன்றாவது அறுவைச் சிகிச்சையின் போது சக ஊழியரிடம் “இடைவெளி” என்று கூறிவிட்டு, அடுத்த அறுவைச் சிகிச்சை அறைக்குச் சென்றுள்ளார்.

அங்கு வேறு ஒரு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

surgery

மருத்துவ உபகரணங்களை எடுப்பதற்காகச் சென்ற செவிலியர் ஒருவர் இதனைப் பார்த்திருக்கிறார். அதன் பின்னர் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் மருத்துவர் சுஹைல் அஞ்சும், அந்த செவிலியர் தனது கால் சட்டையை இறக்கிவிடத் தான் முற்பட்டார் என்று சமாளித்திருக்கிறார்.

அதன் பின்னர் விசாரணையில் தான் பாலியல் செயலில் செவிலியருடன் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து மருத்துவத் தீர்ப்பாயத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டது. டாக்டர் சுஹைல் அஞ்சும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து டாக்டர் சுஹைல் கூறுகையில், “நான் உண்மையிலேயே வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன், எனது நடத்தை குறித்த தீவிரத்தை தற்போது உணர்கிறேன்” என்று அந்தத் தீர்ப்பாயத்தில் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் அவர் சம்பந்தப்பட்ட பொது மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Vikatan Digital Awards 2025: டிஜிட்டல் திறைமையாளர்களுக்கான அங்கீகாரம்; இன்று மாலை 4 மணிக்கு தொடக்கம்

சினிமா விருதுகள், அவள் விருதுகள், நம்பிக்கை விருதுகள் என ஆளுமைகளை வருடந்தோறும் விருது வழங்கி கௌரவப்படுத்திவரும் விகடன், அடுத்தகட்டமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்... மேலும் பார்க்க

இந்தியப் பெண்ணை மணந்த கொரிய இளைஞர்; ரூ.1.26 லட்சம் கர்ப்ப கால உதவித்தொகை வழங்கிய கொரிய அரசு

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை மணந்த கொரிய இளைஞர் திருமணம் செய்தார். அந்தத் தம்பதிக்கு, கர்ப்ப காலத்திற்கான நிதி உதவியாக ரூ.1.26 லட்சம் வழங்கியுள்ளது கொரியா அரசு. வெளிநாட்டுப் பெண்ணை மணந்தாலும், அந்ந... மேலும் பார்க்க

`மெக்டொனால்டில் பாத்திரம் கழுவி முதல் சம்பளம் வாங்கினேன்' - பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிவியில் நடிக்க வந்திருக்கிறார். அவர் தற்போது கியுங்கி சாஸ் பி கபி பஹு தி சீசன் 2ல் நடித்து வருகிறார். அவர் ராகுல் காந்தியை எதிர்... மேலும் பார்க்க

`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?' - செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல்வதென்ன?

சீனாவில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது. கழிப்பறை எப்படி சுற்றுலா தளமாக மாறும் என்று பலரும் யோசிக்கலாம்.ஆனால், கழிப்பறையாக இருந்தாலும் அது கலை நயத்துடன் அலங்கர... மேலும் பார்க்க

`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்சய் தத்!

மும்பையில் பாலிவுட் ரெஸ்டாரண்ட்ஸ் மும்பையில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உப தொழிலாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர். இதில் ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகை ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், இய... மேலும் பார்க்க

`இரவு 7 முதல் காலை 6 வரை வேலை செய்யலாம்..'- பெண்கள் நைட்ஷிஃப்ட் பணியாற்ற குஜராத்தில் சட்டத்திருத்தம்

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற ஏதுவாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க