5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார...
நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டின் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலுருமான சார்லி கிர்க் (வயது 31) கடந்த செப்.10 ஆம் தேதி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டைலர் ராபின்சன் (22) என்ற இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படத் தயாராக இருங்கள் என அமெரிக்க அரசின் செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
”அமெரிக்காவுக்கு வந்து கொலைகள், மரண தண்டனைகளைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப்படக் கூடாது. ஆனால், அவர்கள் ஏற்கெனவே இங்கு இருந்தால் அவர்களது விசா ரத்து செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டி விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், அமெரிக்கா தனது குடிமக்களின் மரணத்தைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களை வரவேற்காது என்றும், அரசியல் பிரபலங்களின் கொலைகளைக் கொண்டாடும் நபர்கள் நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!