பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!
இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!
இஸ்ரேல் நாட்டில் புதியதாக 481 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தேசியளவில் அந்நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 1,42,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இருப்பினும், இஸ்ரேலில் புதியதாக 481 தட்டமை பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாகவும்; இதன்மூலம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளதாகவும், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிகழாண்டில் (2025) ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படாத 18 மாதம் மற்றும் 2 வயதுடைய, ஆண் குழந்தைகள் இருவர் பலியாகியுள்ளனர்.
முன்னதாக, தட்டம்மை பரவலினால் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் சுமார் 1,07,500 பேர் தட்டம்மை பாதிப்புகளினால் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!