சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!
சென்னையில் இன்று(செப். 16) அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
317 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு திரும்பிச் சென்றது.
துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து தாமதமாக சென்னையில் தரையிறங்கின.
மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் செல்லும் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னையில் இன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!