செய்திகள் :

`அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த புகாரில், அந்தக் கடையின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர் கரியாலூர் போலீஸார்.

இந்த நிலையில்தான் இந்தக் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய ஏட்டு பிரபு, அந்தக் கடை உரிமையாளரின் 17 வயது மகளை சந்தித்திருக்கிறார். அப்போது, `உன் அப்பாவை இந்த கேஸில் இருந்து நான் ரிலீஸ் செய்து விடுகிறேன். ஆனால் அதற்கு நீ என்னுடன் அட்ஜஸ்ட் பண்ணனும்’ என்று கூறி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட தனிப்பிரிவு ஏட்டு பிரபு

இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாய்க்கு தெரிய வந்ததும், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி எஸ்.பி மாதவன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஷ்ணுப்பிரியா உள்ளிட்டவர்கள், ஏட்டு பிரபுவை கச்சிராப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஏட்டு பிரபு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அதையடுத்து போக்சோ, வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ஏட்டு பிரபுவை கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபுவின் அறையில் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், சாராயம், கஞ்சா, ஆணுறைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, கரியாலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BMW கார் விபத்து வழக்கில் கைதான பெண், திகார் சிறையில் அடைப்பு; நடந்தது விபத்தா, கொலையா!?

தலைநகர் டெல்லியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த நவ்ஜோத் சிங் (வயது 52) என்ற அதிகாரி பலியான சம்பவம் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. இந்த விபத்... மேலும் பார்க்க

விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக... மேலும் பார்க்க

கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?

மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்‌ஷரில் இர... மேலும் பார்க்க

உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற மனைவி; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராகுல் காந்தி பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தந்தை–மகன் இருவருக்கும் மது அருந்தும... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்

பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில... மேலும் பார்க்க