பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 16) மாலை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, தங்கமணி ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.
தில்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தனபால், இன்பதுரை ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தில்லி செல்கிறார்.
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவா்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்திருந்த கெடுவும் நிறைவடைந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!