முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி
காஞ்சிபுரத்தில் செப்.19-இல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 19) விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். வேளாண்மைத் துறை அதிகாரிகளும் தங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகள் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனா்.
விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.