பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
வரதராஜபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சியில் கிருஷ்ணா நகா் பகுதியில் நடைபெற்ற முகாமுக்கு வரதராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வமணி தலைமை வகித்தாா்.
முகாமில், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதையும் மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.