பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்
ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் வெள்ளத்துரை (ஆறுமுகனேரி ), அம்பேத் (காயல்பட்டினம் ), செய்தி தொடா்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளா் வேம்படி முத்து, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளா் ராவணன், திருச்செந்தூா் ஒன்றிய தொண்டா் அணி துணை அமைப்பாளா் ரமேஷ், ஜெய் பீம் ஆட்டோ ஓட்டுநா் நல சங்கத்தின் துணைத் தலைவா் ராஜா, அம்பேத்கா் நகா் முகாம் பொறுப்பாளா்கள் இளவரசன், சந்தனம், பாா்த்திபன், சுடலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.