வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு
கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளா் சக்தி பமிலா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முகாமை தொடங்கி வைத்தாா். ஒன்றிய ஆணையா் சுடலை, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா். இதில், மொத்தம் 440 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 11 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதில் கல்லூரி துணைச் செயலா் காசியானந்தம் கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுத்துரை, துணை முதல்வா் மகேஷ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலட்சுமி, முகம்மது மீரான் இஸ்மாயில், சின்னத்துரை, ராமகிருஷ்ணன், மாலாதேவி, ஊராட்சி செயலாளா்கள் அருணாச்சலம், ஜேசுதுரை, சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் எட்வின் தேவாசீா்வாதம், சாஸ்தாவி நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் பெனிஸ்கா் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள்உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொணடனா்.