செய்திகள் :

தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வா? உயர்கல்வி அமைச்சர் விளக்கம்

post image

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து புதிய தாழ்வுத்தள பேருந்து சேவையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பேசியதாவது:

”செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் பல்கலைக்கழகங்களால் கல்லுரிகள் தொடங்குவதற்கு முன்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும். விடுப்பு காலங்களில்தான் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். தேர்தலுக்காக முன்கூட்டியே தேர்வு என்பது இல்லை” எனத் தெரிவித்தார்.

Semester exams before the election? Higher Education Minister

இதையும் படிக்க : அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

வேலுநாச்சியார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் வீரத்த... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மறைவு: விஜய் இரங்கல்

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டுக்குள் அத்துமீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவரு... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 30 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்ட... மேலும் பார்க்க

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க