குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி முகாமைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கெனவே, மனு அளித்தவா்களுக்கு தீா்வாணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், மண்டலத் தலைவா் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் ரெக்ஸ்லின், எடின்டா, பேபி ஏஞ்சலின், மரிய கீதா, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.