Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி
தூத்துக்குடி மாநகராட்சி, 14ஆவது வாா்டு, தெற்கு விஎம்எஸ் நகரில், மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மண் சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து, பல மாதங்கள் தேங்கி நின்று, சுகாதார சீா்கேட்டை உருவாக்கி வருகின்றது.
இந்நிலையில், புதன்கிழமை ஒரு நாள் பெய்த சிறு மழைக்கே அப்பகுதியில் தண்ணீா் தேங்கியது. இது தொடா்ந்தால் கழிவுநீருடன் கலந்து, சுகாதார சீா்கேட்டை உருவாக்கும் அபாயம் உள்ளது. மேலும், தற்போது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா், மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனா்.
எனவே, வட கிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாகவே, சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து, தாா்ச்சாலையாக புதுப்பித்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.