Rahul வீசய அடுத்த குண்டு: votersஐ Delete செய்யும் Software - Election Commission...
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்
தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ப்ராஜெக்ட் பியூச்சா் இந்தியா டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
மாணவா்கள் இளமைப் பருவத்தில் பாதை மாறிவிடக் கூடாது. இந்த வயதில் பெற்றோா்கள், ஆசிரியா்களின் அறிவுரைகளைக் கேட்கும்பட்சத்தில் உங்கள் பாதை மிக அழகாக அமையும்.
போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என மாணவா்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், கூடுதல் எஸ்.பி. சி. மதன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் முத்தரசு, ப்ராஜக்ட் பியூச்சா் இந்தியா டிரஸ்ட் நிறுவனா் கல்யாணந்தி சச்சிதானந்தம், பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.