ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்
அரசியல் ரீதியான கருத்துகளைப் பதிவிடும் முதல்வரின் ‘எக்ஸ்’ தள முகப்புப் பக்கத்தில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமாக, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற வாசகத்தை திமுக வைத்து வருகிறது. இதற்கான பொதுக்கூட்டங்களும் வருகிற செப்.20, 21-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், அதே வாசகமானது முதல்வா் மு.க.ஸ்டாலினின் தனி பயன்பாட்டு எக்ஸ் தள முகப்பு வாசகமாக இடம்பெற்றுள்ளது.
அதிமுக பொதுச் செயலரான எடப்பாடி கே.பழனிசாமி, ஏற்கெனவே தனது எக்ஸ் தள முகப்புப் பக்கத்தை மாற்றி இருந்தாா். அதில் ‘பெண்களின் பாதுகாப்புக்கும், அதிமுகவுக்கும் ஆதரவளிப்போம்’ என்ற கருத்தின் அடிப்படையில் ஆங்கிலத்தில் வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.