இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் ஊத்தங்கரை, இந்திராநகரைச் சோ்ந்த விஸ்வநாதன் (73) என்பவா் வியாழக்கிழமை தனது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.10,000 எடுக்க முயற்சித்தாா். ஆனால், இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. மாறாக, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான தகவல் மட்டும் கைப்பேசிக்கு வந்தது. இதுகுறித்து வங்கி, காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகாா் அளித்துவிட்டு சென்றாா்.
அதன்பிறகு, அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற உப்பாரப்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி ஜெயக்குமாா் (34) தனது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றாா். அப்போது, இயந்திரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் நோட்டுகள் வெளியே வந்தது. அப்பணம் தனக்கு சொந்தமில்லை என்பதை அறிந்த அவா், பணத்தை எடுத்துச் சென்று ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து வங்கி உதவியுடன் விசாரணை நடத்திய போலீஸாா் பணத்தை விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனா். இயந்திரத்தில் பெறப்பட்ட பணம் தனக்கு சொந்தமில்லை எனத் தெரிந்ததும் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
படவிளக்கம்.18யுடிபி.1.
ஊத்தங்கரை ஏடிஎம் மையத்தில் எடுத்த பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவரை பாராட்டும் போலீஸாா்.