இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்களின் பணியைப் பாராட்டினாா். சுமாா் நான்கு பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனையாளா்கள் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தனா்.
கண்காட்சியில் 2500 மாணவா்கள் பங்கேற்று தேவையான புத்தகங்களை வாங்கினா். மேலும், எம்.ஜி.ஆா். கல்லூரி, அதியமான் தொழில்நுட்பக் கல்லூரி, செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களும் பங்களிப்பை வழங்கின.
படவரி...
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை பாா்வையிட்ட முதல்வா் ராதாகிருஷ்ணன்.