இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்
தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங்களாக மேற்கொண்ட புலன் விசாரணைக்குப் பிறகு பல்வேறு இடங்களிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான 11 கைப்பேசிகளை மீட்டனா்.
இக்கைப்பேசிகளை உதவி ஆய்வாளா் மோகன், தலைமைக் காவலா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலையில் அதன் உரிமையாளா்களிடம் காவல் ஆய்வாளா் முருகன் ஒப்படைத்தாா்.