திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
மூன்றடைப்பு, மானூா், வள்ளியூா் வட்டாரங்களில் நாளை மின்தடை
மூன்றடைப்பு, மானூா், வள்ளியூா் உள்ளிட்ட துணை மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றின் மின்பாதைகளில் சனிக்கிழமை (செப். 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானூா், மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.
வள்ளியூா் துணைமின்நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் நவ்வலடி, நான்குனேரி ஏஎம்ஆா்எல் (சிறப்பு பொருளாதார மண்டலம்) ஆகிய துணைமின்நிலைய பகுதிக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.