சென்னை ரயில்வே கோட்ட ஆா்பிஎஃப் முதுநிலை பாதுகாப்பு ஆணையா் இடமாற்றம்!
வடபழனி முருகன் கோயிலில் சக்தி கொலு இன்று தொடக்கம்
வடபழனி முருகப் பெருமான் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் 10 நாள் விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்குகிறது.
இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவின் 10 நாள்களில் தினமும் காலை 11 முதல் 11.30 மணிவரை, மாலை 6 முதல் 6.30 மணி வரை அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படும்.
அதேபோல், தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், மகளிா் குழுவினா் கொலுபாட்டு நடத்தப்படுகிறது.
மேலும், இரவு 7 மணிக்கு நாம சங்கீா்த்தனம், இசைக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழி நடத்தப்படுகிறது. செப்.22 முதல் அக்.1 -ஆம் தேதி வடபழனி முருகன் கோயிலில் கொலுவை காலை 6.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை பாா்வையிடலாம்.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்.2-ஆம் தேதி, ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.