பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
மகாளய அமாவாசை: தர்ப்பணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பு!
புரட்டாசி மாத மாகளய அமாவாசையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இன்று(செப். 21) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, மற்ற நாள்களில் வரும் அமாவாசையைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், மாகளய அமாவசையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சாலையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இதன் காரணமாக, ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மகாளய அமாவாசை: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!