செய்திகள் :

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

post image

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் தோலாவிராவின் கிழக்கு-தென்கிழக்கில் 24 கி.மீ தொலைவில் மையமாக கொண்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, மதியம் 12:41 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் வலுவான 3.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பச்சாவ்விலிருந்து 12 கி.மீ வடக்கு-வடகிழக்கில் மையம்கொண்டிருந்தது.

மேகாலயாவில் லேசான நில அதிர்வு

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். கட்ச் பகுதி மிகவும் அதிக ஆபத்துள்ள நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது.

இப்பகுதியில் அடிக்கடி சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Two mild tremors were recorded in Gujarat’s Kutch district on Sunday, with no reports of injuries or damage to property, officials said.

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் (பனிச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்திய வீரர் ஆனந்த்குமார் (22) வேல்குமார் இன்று (செப். 21) சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 42 கி.மீ. மாரத்தா... மேலும் பார்க்க

மேகாலயாவில் லேசான நில அதிர்வு

வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன.அண்டை நாடான வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேகாலயாவ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு கபடி போட்டி ந... மேலும் பார்க்க

சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? பிரபல நிறுவன சிஇஓ

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால், அந்நகரில் இருந்து வெளியேறுவதாக பிரபல தளவாட தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருந்தது.ஊழியர்கள் சாலைப் பள்ளங்கள், போக்கு... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள்!

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது என்று அதிக... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று(செப். 21) மாலை 5 மணிக்கு உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்... மேலும் பார்க்க