திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்
பீகார்: "பிரதமரின் தாய் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்" - பாஜக பகிரும் வீடியோவின் பின்னணி என்ன?
பீகாரில், சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியை தாயை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து பீகார் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "அம்மாதான் உலகம். அம்மாதான் எங்கள் சுயமரியாதை. பாரம்பர்யம் நிறைந்த இந்த பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டத்தின்போது, என் தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டனர், என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.
நான் மன்னித்து விடுவேன், ஆனால் என் தாயை இழிவாகப் பேசியவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று பேசியிருந்தார்.
இது பிகாரில் பெரும் பேசுபொருளாக வெடித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
``அரசியலில் தொடர்பு இல்லாத என் அம்மாவை காங்கிரஸ், ஆர்.ஜே.டி அவமதித்தது ஏன்? - பிரதமர் மோடி வேதனை
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா எழுதியுள்ள ட்வீட்டில், "பீகாரில் உள்ள சீதா மையாவின் நிலத்தில், பிரதமரின் மறைந்த தாயார் மீண்டும் மீண்டும் அவமதிக்கப்படுகிறார்.
காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ மேடையிலிருந்து இது போன்ற செயலை வேடிக்கை பார்த்து, ஊக்குவிக்கின்றனர்.
நேற்றும் மீண்டும் இது நடந்தது, தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் கட்டுக்கடங்காத ஆர்ஜேடி ஆட்கள் பிரதமரின் தாயாரை ஆபாசமாகப் பேசியபோது ஆர்ஜேடி கட்சியினர் அமைதியாக இருந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதமரின் தாயாரை அவமதிப்பதால் என்ன லாபம்? அரசியலில் இந்த அளவுக்குக் கீழ்த்தரமாகப் பேசுவது வெட்கக்கேடானது. ஆர்ஜேடி என்பது மோசமான சிந்தனையைக் கொண்டிருக்கிறது.
பீகாரில் இந்தக் கட்சி இருக்கும் வரை, இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் தொடரும்" என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
सीता मैया की धरती बिहार में बार-बार प्रधानमंत्री जी की दिवंगत माता जी का अपमान किया जा रहा है। कांग्रेस और राजद के नेता पार्टी के अधिकृत मंच से इस दुस्साहस को बढ़ावा दे रहे हैं। कल भी यही हुआ, जब तेजस्वी यादव के सामने राजद के उच्छृंखल कार्यकर्ताओं ने प्रधानमंत्री जी की माता जी के…
— Amit Malviya (@amitmalviya) September 21, 2025
இதுகுறித்து ஆர்ஜேடி கட்சி தரப்பில், "பிரதமரை, அவரது தாயாரை அவமதிக்கும் வார்த்தையை ஆர்ஜேடி தொண்டர்களோ அல்லது வேறு யாரும் பயன்படுத்தவில்லை. பாஜக பகிர்ந்துள்ள வீடியோவில், தேஜஸ்வி யாதவ் பேசுவதைக் கேட்க முடியவில்லை.
இதுபோன்ற போலியான வீடியோ அவர்கள் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக (ஆர்ஜேடி) அவதூறு பரப்புவதற்காக வீடியோவை திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் பீகாரில் பெரும் பேசுபொருளாக வெடித்து வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs