செய்திகள் :

அனிருத்துக்கு போட்டியா? சாய் அபயங்கர் பதில்!

post image

அனிருத் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியுள்ளார்.

ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும் ரசிகர்களின் ரசனைகள் மாற மாற, புதுப்புது விஷயங்களின் மீதும் உருவாக்கங்களின் மீதும் ஈர்ப்பு ஏற்படுகின்றன. தமிழ் இசைத்துறையில் அப்படி நிறைய நடந்தாலும் எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இவர்களைத் தொடர்ந்து அனிருத் என ஒரு வரிசை இருக்கிறது.

பழைய அலைகளின் சீற்றம் குறையக் குறைய புதிய அலைகள் வருவது இயல்புதான். ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரை நிகழாத ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தன் இசையமைப்பில் ஒரு திரைப்படம்கூட வெளியாகாத இசையமைப்பாளருக்கு ஒரே நேரத்தில் 8 திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு. சாதாரணமானதா? யாருப்பா இவர் எனப் பார்த்தால், அது சாய் அபயங்கர்.

சில ஆல்பம் பாடல்கள் மூலம் கவனம் பெற்றவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அனிருத்துக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகளெல்லாம் இப்போது சாய் அபயங்கரின் முடிவுக்காக காத்திருக்கின்றன.

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம், “நீங்கள் அனிருத்துக்கு போட்டியா” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு சாய், “அனிருத் நிறைய சாதனைகளைச் செய்துவிட்டார். நான் இப்போதுதான் அறிமுகமாகியிருக்கிறேன். எனக்கும் அவருக்கு போட்டி கிடையாது. ஆல்பம்களுக்கும் சினிமாவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பலரும் புதிதாகக் கேட்கிறார்கள். அதனால், சுதந்திரமாக பணியாற்றுகிறேன். கடந்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு டிரெண்டிங் அழுத்தம் இல்லை. ஆனால், இன்று இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் இசையில் முழு கவனம் செலுத்த முடிகிறது. மேலும், எனக்கு எந்த பி.ஆர். (மார்க்கெட்டிங்) அணியும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!

musician sai abhyankkar about anirudh and his career

பன்னீருக்குப் பதில் சிக்கன்... ஆத்திரமடைந்த சாக்‌ஷி அகர்வால்!

நடிகை சாக்‌ஷி அகர்வால் தனக்கு அசைவ உணவை வழங்கிவிட்டதாக கோபமாகப் பதிவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். திரைப்படங்களில் குறைவாக நடித்தாலும் விளம்பரங்கள் மற்றும் ஃ... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!

நடிகா் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை காலமான நிலையில், அவரது மகளும் நடிகையுமான இந்திரஜா சங்கர் தனது தந்தை குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிர... மேலும் பார்க்க

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர்மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’ , ‘திரிஷ்யம் 2’ ஆ... மேலும் பார்க்க

தாதா சாகேப் பால்கே விருது! ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மோகன்லால் நன்றி!

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் மோகன்லால், விருதுக்கும் வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.செப். 23-இல் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு... மேலும் பார்க்க

சார்பட்டா - 2 பேசப்போகும் அரசியல் என்ன?

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021இல் ந... மேலும் பார்க்க

மீண்டும் படப்பிடிப்பு விபத்தில் சிக்கிய ஜோஜு ஜார்ஜ்!

நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார்.ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யாவுடன் ரெட்ரோ நடிகர் கமல் ஹாசனுடன் தக் லைஃ... மேலும் பார்க்க