செய்திகள் :

பாகிஸ்தானில் பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்த குழந்தைகள்!

post image

பாகிஸ்தானில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிருடன் புதைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் ஹஃபீஸாபாத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை சனிக்கிழமை(செப். 20) மாலை பெயர்ந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்தின் உள்ளே இருந்த 9 குழந்தைகளும் இரு ஆசிரியர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க மீட்புக்குழுவினர் போராடினர். அதில் 3 குழந்தைகள் உயிர் பிழைத்தனர். எனினும், பிறர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் பெய்த மழையால் விபத்துக்குள்ளான கட்டடத்தின் கட்டுமானம் சிதிலமடைந்திருந்ததாகவும் அதைச் சீரமைக்காமல் விட்டதே, கூரை இடிந்து விழ காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

Six children among eight buried alive after roof collapse in Pakistan's Punjab

வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: 7 சிலைகள் உடைப்பு!

துர்கா பூஜையையொட்டி வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.துர்கா பூஜைக்கான ஏற்பாட... மேலும் பார்க்க

உகாண்டாவில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி

உகாண்டாவில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர். வடக்கு உகாண்டாவில் உள்ள அமோலடர் மாவட்டத்தில், கியோகா ஏரியில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் ... மேலும் பார்க்க

இதுவரை வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71 - 72% இந்தியர்கள்!

மலிவான வெளிநாட்டு ஊழியர்களை நீக்கிவிட்டு அமெரிக்கர்களை பணிக்கு நியமிக்கும் வகையில் ஹெச் - 1பி விசா விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக்கொலை; இளைஞர் கைது

அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக் கொன்ற கொள்ளையரை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது.அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், பெட்ரோல் பங்கை குஜராத்தைச் சேர்ந்த கிரண் படேல் (49) நிர்வகித்து வந்தார். இந்த நில... மேலும் பார்க்க

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு - அமெரிக்கா விளக்கம்

எச்-1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.அமெரிக்காவில் எச்1பி விசாவின் புதிய கட்டண அறிவிப்புக்கு அமெரிக்க நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்படும் ... மேலும் பார்க்க

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

இந்தியா-கனடா உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், கனடா தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் நத்தாலி டி... மேலும் பார்க்க