விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்
எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு - அமெரிக்கா விளக்கம்
எச்-1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.
அமெரிக்காவில் எச்1பி விசாவின் புதிய கட்டண அறிவிப்புக்கு அமெரிக்க நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்படும் என்ற நிலையில், விசா கட்டணம் குறித்த விளக்கத்தை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எச்1பி விசா கட்டணம் குறித்து வெள்ளை மாளிகை தெரிவித்ததாவது,
எச்1பி விசா கட்டணமானது, வருடாந்திர கட்டணம் அல்ல. இது ஒருமுறை விண்ணப்பக் கட்டணம் மட்டுமே.
ஏற்கெனவே எச்1பி விசா வைத்திருப்பவர்களும், தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பவர்களும் மீண்டும் நுழைய ஒரு லட்சம் டாலர் வசூலிக்கப்பட மாட்டாது. எச்1பி விசா வைத்திருப்பவர்கள், எப்போதும்போல நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம். நேற்றைய அறிவிப்பால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
புதிய கட்டண அறிவிப்பு, புதிதாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது.
எச்-1பி விசா என்பது ஒரு குடியுரிமை வழங்கப்படாத விசா முறையாகும். இது அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை மிகவும் சிறப்பு வாய்ந்த பணிகளில் பணியமர்த்த அனுமதிக்கிறது
இந்த நிலையில்தான், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு எச்1பி விசாவில் புதிய மாற்றத்தை அறிவித்தது. அதன்படி, எச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தி அறிவித்தது. முன்னதாக, ஒரு லட்சம் ரூபாயாக இருந்த விசா கட்டணம், தற்போது சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், எச்1பி விசாவில் பணியாற்றும் தங்களது ஊழியர்களை அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்திய நிலையில், வெள்ளை மாளிகை விளக்கமாக விவரித்துள்ளது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!