ஜப்பான்: தன் மகனை விட 6 வயது இளையவரை மணந்த 63 வயது பெண்; எப்படி மலர்ந்தது இந்தக் காதல்?
63 வயதான ஜப்பானியப் பெண் ஒருவர் தனது மகனை விட ஆறு வயது இளையவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அசராஷி என்ற அந்த 63 வயதான பெண்மணி, தனது 48 வயதில் விவாகரத்து பெற்று, தனது குழந்தையை ஒற்றைத் தாயாக வளர்த்து வந்துள்ளார். இவரின் மகனுக்குத் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு, தனிமையில் வாழ்க்கை கழித்த அசராஷி, ஹோட்டலில் ஒரு இளைஞரைப் பார்த்துப் பழகிய பின்பு காதலில் விழுந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தவறவிட்ட மொபைல் போனை திருப்பிக் கொடுத்த போது அந்த இளைஞரை முதல் முதலாக அசராஷி சந்தித்துள்ளார்.
முதலில் இருவரும் தற்செயலாகச் சந்தித்த பிறகு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் சந்தித்து மொபைல் எண்ணைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

மணிக்கணக்கில் பேசிய இவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது. டேட்டிங் செய்த ஒரு மாதத்திற்குப் பின்பே இருவரின் உண்மையான வயது தெரிய வந்துள்ளது. ஆனாலும் அவர்களின் காதலை விட்டுக் கொடுக்கவில்லை. முதலில் இளைஞரின் தாயார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மகனின் ஆசையை ஏற்றுக் கொண்ட தாய் இருவர்களின் காதலையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அசாராஷியின் மகன் ஆரம்பத்திலிருந்தே இந்த உறவை ஆதரித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
63 வயதான பெண்மணி 31 வயதான இளைஞர் மீது காதல் கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!