செய்திகள் :

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

post image

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் ‘மோடி யுவா ரன்’ எனும் மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.

சேலம் நெடுஞ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வியூகம், அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்தும் , பாஜக - அதிமுக இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில், இபிஎஸ் - நயினார் நகேந்திரன் இடையேயான சந்திப்பு அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க: விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

BJP state president Nainar Nagendran met AIADMK general secretary Edappadi Palaniswami in Salem.

இபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த்... மேலும் பார்க்க

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகையில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமையில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்த... மேலும் பார்க்க

விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்

திமுகவை வீழ்த்துகிற சக்தி அதிமுகதான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.தவெகவுக்கு வரும் கூட்டம், வாக்குகளாக மாறும் என்று கூறப்படும் நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக... மேலும் பார்க்க

குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி: முதல்வர் ஸ்டாலின்

குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் பதிவு செய்ய ‘சென்ன... மேலும் பார்க்க

விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதைவிட அதிகமான தாக்கத்தை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அமமுக பொதுச் செ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெ... மேலும் பார்க்க