குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி: முதல்வர் ஸ்டாலின்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 6000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.39 அடியிலிருந்து 118.62 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 91.28 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!