செய்திகள் :

ADMK - BJP: எடப்பாடி பழனிசாமி - நயினார் திடீர் சந்திப்பு! - பின்னணி என்ன?

post image

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று கறாராகப் பேசினார்.

அடுத்த நாளே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கினார்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. இது பாஜக - அதிமுக கூட்டணியிலும் சர்ச்சைகள் வெடிக்க வைத்திருகிறது. டிடிவி தினகரன் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று NDA கூட்டணியிலிருந்து விலகிவிட்டார். இப்படியாக சர்ச்சைகள் வெடிக்க பழனிசாமி, அமிஷாவைச் சந்தித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மினி மாரத்தானை தொடங்கிவைத்தார் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார். இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

எடப்பாடி பழனிசாமி, நயினார்
எடப்பாடி பழனிசாமி, நயினார்

இதையடுத்து திண்டுக்கல்லில் பாஜக சார்பில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார் நயினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதில் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் அதிமுக - பாஜக விவகாரம், அதிமுக ஒன்றிணைவு குறித்து ஏதும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Modi: பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் காணொலி மூலம் உரையாடுகிறார்; பின்னணி என்ன?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார். 2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது,... மேலும் பார்க்க

Modi: "இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்;எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு..!" - பிரதமர் மோடி

குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்... மேலும் பார்க்க

``எல்லாவற்றையும் கூகுள், AI பார்த்துக்கொள்ளும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்'' - ஸ்டாலின் அறிவுரை

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை

சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்திருக்கின்றன மெட்ரோ ரயில்கள்.சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் அலுவ... மேலும் பார்க்க

Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது 'மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்' என்ற பெயரில் தொடங்கப்பட... மேலும் பார்க்க

``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்

மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான... மேலும் பார்க்க