VCK: "விஜய்க்கு அந்த துணிச்சல் இருக்கிறதா?"- ஆளூர் ஷாநவாஸ் கேள்வி
சார்பட்டா - 2 பேசப்போகும் அரசியல் என்ன?
இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசியிருந்தது.
தொடர்ந்து, கடந்தாண்டு சார்பட்டா - 2 அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், “சார்பட்டா - 2 கதையை எழுதி முடித்துவிட்டோம். சில மாறுதல்களை மேற்கொண்டு படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம். இப்படம் மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தையே பேசுகிறது. குத்துச்சண்டைக்கான காட்சிகளும் நன்றாக வந்திருப்பதால் பலருக்கும் இக்கதை பிடிக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, இரஞ்சித் வேட்டுவம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்ததும் சார்பட்டா - 2 துவங்குகிறது.
இதையும் படிக்க: மீண்டும் படப்பிடிப்பு விபத்தில் சிக்கிய ஜோஜு ஜார்ஜ்!