செய்திகள் :

"பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைத்தபோது நம்ப முடியவில்லை" - மோகன்லால் நெகிழ்ச்சி

post image

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையிலிருந்து கொச்சிக்கு வந்தார் மோகன்லால். தனக்கு விருது அறிவிக்கப்பட்டதை கேக் வெட்டி கொண்டாடினார் மோகன்லாலுக்கு பலரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மோகன்லால் கூறுகையில், "என்மீது அன்பு வைத்து வரவேற்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சினிமாவில் மிகப்பெரிய விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. 48 வருட என்னுடைய சினிமா வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய விருதாக இதை நான் பார்க்கிறேன். அதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னை உருவாக்கிய மலையாள சினிமாவுக்கும். என்னுடன் பணிபுரிந்த, பணிபுரிந்துகொண்டிருக்கிற, இனி பணிபுரியப் போகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை மலையாள சினிமாவுக்கு சமர்ப்பிக்கின்றேன். விருது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போனில் தகவல் தெரிவித்தார்கள். முதலில் என்னால் நம்பமுடியவில்லை. கடந்தவைகளைப்பற்றியும், வரப்போவது குறித்தும் நான் சிந்திப்பதில்லை. நிகழ்காலத்தை பற்றி மட்டுமே சிந்திகின்றேன்.

பிரதமர் மோடியுடன் மோகன்லால்

மிகப்பெரிய ஜாம்பவான்கள் நடந்துசென்ற வழியில் நானும் பயணிக்கிறேன். சிறப்பு மிக்க இந்த விருது, இதற்கு முன்பு மிகப்பெரிய செலிபிரிட்டிகளுக்கு கிடைத்திருக்கிறது. அதில் நானும் இடம்பெற்றதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஈஸ்வரனுக்கும், என் குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும், என்னை விரும்பும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருது மலையாள சினிமாவுக்கு கிடைத்ததாகும்.

  48 ஆண்டுகளாக எனக்கு உதவிய பலரும் இன்று இல்லை. நான் அவர்களை நினைத்துப்பார்க்கிறேன். இயக்குநர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ், ஆர்ட்டிஸ்டுகள், யூனிட் பாய்ஸ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் எனை அனைவரும் சேர்ந்துதான் மோகன்லால் என்ற நடிகர் உருவாகினார். என் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Mohanlal - மோகன்லால்
Mohanlal - மோகன்லால்

இந்திய சினிமாவில் மிகப்பெரிய விருது மலையாள சினிமாவுக்கு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. தேசிய விருது போன்ற நிறைய விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. தாதா சாகேப் பால்கே மலையாள சினிமாவுக்கு கிடைக்கும் இரண்டாவது விருது என்பதில் தனி சிறப்பு உண்டு. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஈஸ்வரனுக்கும், ரசிகர்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 48 ஆண்டுகளாக நான் இருக்கும் சினிமா துறையை ஈஸ்வரனாக பார்க்கிறேன். அதில் எனது செயல்பாடு பிரார்த்தனைபோன்றது. அதனால்தான் நான் ஈஸ்வரன் தந்த அவார்டு என குறிப்பிட்டுச் சொல்கிறேன்" என்றார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திருஷ்யம் -3 சினிமா படபிடிப்பு நாளை தொடங்க உள்ளதாகவும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மோகன்லால் தெரிவித்தார்.

Dadasaheb Phalke Award: "சினிமாவை சுவாசிக்கும் உண்மையான கலைஞன்" - மோகன்லாலை வாழ்த்திய மம்மூட்டி

இந்திய சினிமா துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு இன்று (செப்டம்பர் 20) அறிவித்திருக்கிறது.தாதாசாகேப் பால்கே:இந்தியாவின... மேலும் பார்க்க

"ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு இது தகுதியான அங்கீகாரம்"- மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன்

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

Mohanlal: நடிகர் மோகன்லாலுக்கு `தாதாசாகேப் பால்கே விருது' மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்ட... மேலும் பார்க்க

Anupama parameswaran: `அழகே அழகே பேரழகே' - அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Lokah: ``லோகா வெற்றிக்குப் பிறகு இந்த அபாயம் இருக்கிறது!'' - ஜீத்து ஜோசப் சொல்வதென்ன?

இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அவர் பகிரும் விஷயங்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.Mirage Movie அப்படி ஒர... மேலும் பார்க்க

Lokah: ``நஷ்டம் ஏற்படும் என நினைத்தோம்!'' - துல்கர் சல்மான்

இயக்குநர் டாமினிக் அருண் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படமான `லோகா' நாடெங்கும் அதிரடி வசூல் புரிந்தது. சூப்பர் ஹீரோவாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, சாண்டி, நஸ்லென் ஆகியோரும் படத்தின் முக்கியக... மேலும் பார்க்க