செய்திகள் :

தாதா சாகேப் பால்கே விருது! ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மோகன்லால் நன்றி!

post image

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் மோகன்லால், விருதுக்கும் வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

செப். 23-இல் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொச்சியில் செய்தியாளர்களுடன் மோகன்லால் பேசுகையில்,

``நடுவர் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் எனது நன்றிகள். இந்தப் புகழை உருவாக்கிய மலையாள சினிமாவுக்கும் நன்றி. எனது 48 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இது ஒரு பெரிய சாதனை.

பல திறமையான சாதனையாளர்கள் சென்ற பாதையில், நானும் ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.

என்னுடன் பணியாற்றிய பலர் இப்போது இல்லை. என்னுடன் இருந்த இயக்குநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், உதவியாளர்கள் ஆகியோரும் இந்த விருதில் பங்களித்துள்ளனர். இது தனிப்பட்ட சாதனையல்ல.

மலையாள சினிமாவுக்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆனால், இது சிறப்பு வாய்ந்தது’’ என்று தெரிவித்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குவதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க:சார்பட்டா - 2 பேசப்போகும் அரசியல் என்ன?

Mohanlal thanks family, audience after winning Dadasaheb Phalke Award

அனிருத்துக்கு போட்டியா? சாய் அபயங்கர் பதில்!

அனிருத் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியுள்ளார். ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும் ரசிகர்களின் ரசனைகள் மாற மாற, புதுப்புது விஷயங்களின் மீதும் உருவாக்கங்களின் மீதும் ஈர்ப்பு ஏற்படுகின்றன. தமிழ் இசைத்... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!

நடிகா் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை காலமான நிலையில், அவரது மகளும் நடிகையுமான இந்திரஜா சங்கர் தனது தந்தை குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிர... மேலும் பார்க்க

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர்மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’ , ‘திரிஷ்யம் 2’ ஆ... மேலும் பார்க்க

சார்பட்டா - 2 பேசப்போகும் அரசியல் என்ன?

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021இல் ந... மேலும் பார்க்க

மீண்டும் படப்பிடிப்பு விபத்தில் சிக்கிய ஜோஜு ஜார்ஜ்!

நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார்.ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யாவுடன் ரெட்ரோ நடிகர் கமல் ஹாசனுடன் தக் லைஃ... மேலும் பார்க்க

ஆண்பாவம் பொல்லாதது வெளியீட்டுத் தேதி!

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயக... மேலும் பார்க்க