Vadivelu: ``10 பேர் சேர்ந்து சினிமாவையே அழிக்க முயல்கிறார்கள்" - நடிகர் சங்க பொதுக் குழுவில் வடிவேலு
69-வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை காமாராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தொடங்கி தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

சமீபத்தில் மறைந்த திரைக் கலைஞர்களுக்கு இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேல் யூட்யூபர்கள் தொடர்பாகப் பேசிய விஷயம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.
இந்த நிகழ்வில் வடிவேல், "சில நடிகர்கள் தங்களின் படம் நன்றாக ஓட வேண்டும் என அவர்களின் போட்டி நடிகர்களின் படத்திற்கு யூட்யூபர்கள் மூலம் எதிர்மறையான விமர்சனங்களைத் தர வைத்து தோல்வியடையச் செய்கிறார்கள்.
நம்முடைய திரைக்கலைஞர்களைப் பற்றி தவறாகப் பேசி சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி விடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலரே இந்தப் படத்தைப் பற்றி, அதைப் பற்றி பேசு எனப் பேச வைக்கிறார்கள்.

இந்த விஷயத்திற்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் சிலரும் உடந்தையாக இருக்கிறார்கள்.
இந்தச் செயலை நடிகர் சங்கத்தினர் யாரும் கண்டிப்பதில்லை. நடிகர் சங்கம் நடிகர்களைப் பாதுகாப்பதற்குதான்.
10 பேர் சேர்ந்து சினிமாவையே அழிக்க முயல்கிறார்கள். நடிகர் சங்கம் இதனைத் தடுக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...