ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை இன்று(செப். 21) மூண்டுள்ளது. கிஷ்ட்வார் மாவட்ட வனப்பகுதிகளில் மூண்ட இந்த எண்கவுண்ட்டரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
உளவுப் பிரிவு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பகல் 1 மணியளவில் கிஷ்ட்வார் மாவட்ட வனப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தக்க பதிலடி ராணுவத்தால் அளிகப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.