செய்திகள் :

ரூ. 5000 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு நாளை அடிக்கல்!

post image

அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இதனையொட்டி சாலைப் பராமரிப்பு, மேடை அலங்காரங்கள், மக்கள் கூடுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை அருணாச்சல் அரசு செய்து வருகிறது.

இது தொடர்பாக அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ''பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இடா நகரிலுள்ள ஐஜி பூங்காவில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டேன்.

பிரதமரிடமிருந்து இதுபோன்ற ஒரு அக்கறையை அருணாச்சல் மக்கள் இதுவரை பார்த்ததில்லை. மக்களின் கனவு மற்றும் மேம்பாட்டிற்கான உண்மையான அக்கறையை பிரதமரிடம் பார்க்கமுடிகிறது. பல்வேறு நலத் திட்ட உதவிகளைத் தொடக்கிவைத்து முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் ஆர்வமுடன் இருக்கிறோம். அருணாசலின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் பிரதமரின் நலத்திட்டங்கள் சென்று சேரும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

1,830 கி.மீ. நெடுஞ்சாலை உள்பட ரூ. 1,291 கோடி மதிப்பிலான 10 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலையின் மூலம் இந்தியா - மியான்மர் எல்லையிலுள்ள 67 கிராமங்கள், இந்தியா - பூடான் எல்லையிலுள்ள 55 கிராமங்கள் உள்பட அருணாசலில் 122 கிராமங்கள் பலனடையும்.

4ஜி பயன்பாடு, போக்குவரத்து, வணிகம் போன்றவை அதிகரித்தாலும், எல்லைகள் இணைப்பு, தேசிய பாதுகாப்பு போன்றவற்றிற்கு இந்த சாலைகள் வழிவகுக்கும் என அருணாச்சல் அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | 42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

PM Modi to lay foundation stones for 13 projects worth over Rs 5,127 crore in Arunachal tomorrow

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை இன்று(செப். 21) மூண்டுள்ளது. கிஷ்ட்வார் மாவட்ட வனப்பகுதிகளில் மூண்ட இந்த எண்கவுண்ட்டரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வ... மேலும் பார்க்க

பிரதமர் உரையில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்தார்கள்; அப்படியொன்றும் புதிதாகப் பேசவில்லை! -காங்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) மாலை 5 மணியளவில் மக்களுடன் காணொலி வழியாக உரையாற்றினார். அதில், அவர் ஜிஎஸ்டி சீர்திருத்த விவகாரம் வருமான வரியில் தளர்வு உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பே... மேலும் பார்க்க

மோடியும் ராகுலும் மக்களை பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள்: பிரசாந்த் கிஷோர்

மோடியும் ராகுலும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள அரசியல்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் பொருள்களுடன் போட்டிபோடும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்புகள் ... மேலும் பார்க்க

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்த... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தல்

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போ... மேலும் பார்க்க