ஒயின் ஷாப்பில் பிடிபட்ட நோட்டு; அலர்ட்டான போலீஸ்; கைதான கும்பல் - கரூர் அதிர்ச்ச...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இன்று(செப். 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை(செப். 21) முதல் ‘சுதந்திர நாடாக பாலஸ்தீனம்’ என்பதை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை பிரிட்டன் மற்றும் கனடாவின் பிரதமர்களும் வெளிப்படுத்தி பாலஸ்தீன மக்களுக்கான தங்களது ஒருமித்த ஆதரவை மீண்டுமொருமுறை உரைத்துள்ளனர்.
ஜி7 கூட்டமைப்பிலிருந்து முதல் நாடாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரித்திருப்பதும் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.