செய்திகள் :

திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

post image

திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், நம்முடைய பைகள் நிரம்பப் போகிறது. ஜிஎஸ்டி மறு சீரமைப்புக்கு வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் அங்கீகாரம் போய்விட்டது. மக்கள் நீதி மையம், கொங்கு கட்சி, ஜவஹிருல்லா கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. எங்களைப் பார்த்து பயப்படுவதாக சொன்னார்கள், இன்று அவர்கள் கூட்டணி போய்விடும் போல் உள்ளது.

காங்கிரஸ் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று சொல்கிறார்கள். திருமாவளவன் ஏற்கெனவே சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுகள், உழைப்பாளர்கள் என்று சொல்லிவிட்டு தற்போது பெட்டி பாம்பாய் அடங்கி விட்டார்கள். தேர்தல் வர வர தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும். இந்தியா கூட்டணி உதிரும். விஜய் இரண்டு, மூன்று நாள்களாக பெரிய கூட்டத்தை கூட்டுகிறார். அவரிடம் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி தருபவர் சரி பார்த்து எழுதிக் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

திடீரென்று அரசியலுக்கு வந்தவுடன் என்னவென்று புரியாமல் உள்ளார். வருபவர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள், வாக்களிக்க வரவில்லை. ஒரு விஷயத்தில் நான் விஜயுடன் உடன்படுகிறேன் முதல்வர் வெளிநாட்டுக்கு முதலீடு ஈர்க்க செல்கிறாரா, முதலீடு செய்ய செல்கிறாரா என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். திமுக நிச்சயம் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டியில் மக்கள் பலன் பெறப்போகிறார்கள்.

ஆனால் கலர், கலராக சட்டை போட்டுக் கொண்டு ஷூட்டிங் நடத்துகிறார்கள். ஒரே வித்தியாசம் என்னவென்றால் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

DMK opposition should be intensified by Vijay, said former BJP leader Tamilisai Soundararajan.

கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது; விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும்: கமல்ஹாசன்

சென்னை: விஜய்க்கு கூடிய கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. இது விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில... மேலும் பார்க்க

விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும்: கே.டி.ராஜேந்திர பாலாஜி

விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சிவகாசியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளி... மேலும் பார்க்க

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 23ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. ம... மேலும் பார்க்க

தவெகவுக்கான மக்கள் ஆதரவு கண்டு பிறருக்கு அச்சம்: விஜய்

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொ... மேலும் பார்க்க