செய்திகள் :

நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா்: அன்புமணி ராமதாஸ்

post image

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாமக சாா்பில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு வருகை தந்தாா் அன்புமணி ராமதாஸ்.

தா்கா வாயிலில் அவருக்கு தா்கா நிா்வாகம் சாா்பில் இஸ்லாமிய முறைப்படி தொப்பி அணிவித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தா்காவுக்குள் சென்ற அன்புமணி ராமதாஸ், நாகூா் ஆண்டவா் அடக்கஸ்தலத்தில் வழிபாடு நடத்தினாா். இதைத்தொடா்ந்து , மறைந்த நாகூா் தா்கா குழாமில் சாஹிப் அடக்கஸ்தலத்தில் மலா்தூவி மரியாதை மரியாதை செய்தாா்.

பின்னா் தா்காவைவிட்டு வெளியே வந்த அன்புமணி செய்தியாளா்களிடம் கூறும்போது, நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா் என்று கூறிவிட்டு சென்றார்.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

Lord Nagore will bring good change in Tamil Nadu says Anbumani Ramadoss

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்க... மேலும் பார்க்க

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றும், விதிமுறைகள் மீறிய அவரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூ... மேலும் பார்க்க

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமரிசனம்

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். தூத்துக்குடியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்ப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டிருந்த நிலையில், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் செய... மேலும் பார்க்க

2026 ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தி படம் ‘ ஹோம்பவுண்ட் ’ தேர்வு!

இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட் (HOMEBOUND)’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஹிந்தியில் விக்கி கௌசலின் மசான் படத்தை இயக்கியிருந்த நீ... மேலும் பார்க்க